|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

CISF RTC


      மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின், பிராந்திய பயிற்சி மையம் தக்கோலம் அடுத்த நகரிகுப்பம் கிராமத்திற்கு அருகில் 1988 இல் ஏற்படுத்தப்பட்டது. சுரக்க்ஷா வளாகம் என்றழைக்கப்படும் இங்கே மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் ஆறாவது ரிசர்வ் பட்டாலியன் தலைமையகமும் அமைந்துள்ளது.

      நகரிலிருந்து சற்றே ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தாலும், இவ்வளாகம் பசுமையான புல்வெளிகளுடன் கூடிய ஆரோக்கியமான சூழலில் உள்ளது. அரக்கோணத்திலிருந்து தொடர்வண்டி மூலமாகவும் (திருவாலாங்காடு ரயில் நிலையம் மூலம்) இந்த பயிற்சி மையத்தை அடையலாம் 3 கி.மீ தொலைவிலிருக்கும் தக்கோலம், அருகாமையிலுள்ள பேருந்து நிறுத்தம் ஆகும். இங்கிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள திருவாலாங்காடு தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரக்கோணம் மற்றும் சென்னை மார்க்கமாக பயணிக்க புறநகர் தொடர்வண்டி வசதி உள்ளது. RTC வளாகத்திலிருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ளது அருகாமை விமான நிலையமான சென்னை. சமீபத்திய சுனாமி தாக்குதலுக்குப் பின், இங்கு தேசிய பேரிடர் மீட்புப் படை (National Disaster Recovery Force) ஒன்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பயிற்சியும் இங்கேயே அளிக்கப்படுகிறது.

      நாட்டில் உள்ள அனைத்து மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையங்களில் இங்குள்ளது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை பொறுப்பேற்று நடத்தும் அலுவலர் D.I.G அந்தஸ்து உளளவர்.

       மேலதிக விபரங்களுக்கு,    http://cisf.nic.in/training_files/rtca.htm

புகைபடம்



* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.