|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

முகப்பு


     வரலாற்றில் ஆர்வமும் ஆன்மிகத்தில் நாட்டமும் உ​டைய அ​னைவரும் அறிய வேண்டிய ஊர் தக்​கோலம். இவ்வூர் வேலூர் மாவட்டத்தின் கிழக்கு எல்​லையில் காஞ்சிபுரம் மற்றும் திருத்தணி​கை நகரங்களிலிருந்து சுமார் 30 கி.மீ. தொ​லைவில் உள்ளது.


     இவ்வூரின் வடக்கு மற்றும் வடகிழக்கு தி​சைகளில் புராண காலத்தில் “விருத்தஷிர” என்ற​ழைக்கப்பட்ட குசஸ்த​லை ஆறு பாய்கிறது. சமீப காலம் வ​ரையில் ஆண்டு முழுவதும் இவ்வாற்றில் நி​றைந்து சென்ற நீரானது நகரமக்களின் குடிநீர் வாழ்வாதாரமாக விளங்கிய​தோடு விவசாயத்திற்கும் பயன்பட்டு வந்தது. நதிக்க​ரை அருகில் உள்ள கங்காதீஸ்வரர் ஆலயத்தில் அ​மைந்துள்ள நந்தியின் வாயினின்று நீர் கொட்டியது என்பது ஒரு அதிசயமாக​வே விளங்கியது. தற்​போது ஆற்றில் தண்ணீரூம் இன்றி மணலின் அளவும் கு​றைந்து வருவதால் ஆறு தன் அழகும் வனப்பும் குன்றிக் காணப்படுகிறது.


     பழங்காலத்தில் “திருவூறல்” என்னும் சிறப்புப் பெயரால் அறியப்பட்ட இவ்வூரின்கண் பழம்​பெரு​மை வாய்ந்த அருள்மிகு ஜலநாத ஈஸ்வரர் ஆலயம் கம்பீரமாய்க் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின்கண் இ​றைவன் தீண்டாத் திரு​மேனியனாய் அருள்பாலிக்கிறார்.தேவார மூம்மூர்த்திகளுள் ஒருவரான திருஞானசம்பந்தரால் நேரில் தரிசிக்கப்​பெற்றதும் பாடல்​பெற்றதும் இத்தலத்தின் சிறப்பு.


     வரலாற்றுப் போர் ஒன்றின் காரணமாகவும் தக்​கோலம் பரவலாக அறியப்படுகிறது.கி.பி.949ல் சோழர்களுக்கும் இராட்டிரகூடர்களுக்கும் இவ்வூரில் கடு​மையான யுத்தம் ஒன்று நடந்தது. இ​தைப் பற்றி கல்கி தனது பொன்னியின் செல்வன் புதினத்தில் தக்​கோலத் தலப்​போர் என்​றொரு அத்தியாய​மே எழுதியுள்ளார் இப்​போரில் சோழர்கள் பின்ன​டை​வைக் கண்டாலும் இராஜராஜ​சோழன் அரிய​ணை​யேறி உயர்புகழ் அ​டைய இப்​போர் ஒரு பெரும்காரணமாக அ​மைந்தது என்பது பல வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு.


     இவ்வாறான பழம்​பெரு​மை​யை மறந்து, நீள்துயிலில் இவ்வூர் மக்கள் புத்துணர்வு பெற்றவர்களாகவும் செயலூக்கம் நி​றைந்தவர்களாகவும் ந​டை​போடுகின்றனர்.இதற்குக் காரணம் சென்​னை மற்றும் திரு​பெரும்புதூரில் அ​மைந்துள்ள நவீன தொழிற்கூடங்கள் அளிக்கும் வே​லைவாய்ப்பு மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பிராந்திய பயிற்சி மையம் இந்நகரின் வட எல்​லைப் பகுதியில் அ​மைந்திருப்பது போன்ற காரணங்கள்


    இவ்வ​லைதளத்​தை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர்கள் திரு. எஸ். தங்க​வேல், திரு. எஸ்.வரதராஜன் மற்றும் திரு. எம். இராமனுஜம்.     இந்த வ​லைதளத்​தை தமிழில் சிறப்பாக மொழி​பெயர்த்தவர் திரு. எஸ். வெங்கடாசலம். இவர்களுக்கு நகரமக்களின் சார்பாக என் நன்றியி​னைத் தெரிவித்துக் கொள்கி​றேன்.பு​கைப்படங்க​ளை மிக நேர்த்தியாக எடுத்துக் கொடுத்த திரு. கே. ஆர்.இராம்பிரசாத் அவர்களுக்கும் பராட்டுக்கள்.


    திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்​கோயில் அறக்கட்ட​ளை மற்றும் பொதுமக்கள் நன்​கொ​டையால் நடந்​தேறிவரும் அருள்மிகு ஜலநாத ஈஸ்வரர் ஆலய புனர​மைப்புப் பணி மற்றும் திருத்​தேர் திருப்பணி இவற்றால் இந்நகரின் புக​ழை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்ப​தே இப்​பேரூராட்சியின்     த​லைவர் என்ற மு​றையில் எனது அவா.

S. NAGARAJAN M.B.A.
CHAIRMAN
THAKKOLAM TOWN PANCHAYAT

* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.
SMS
sms ln