|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

வங்கிகள்

   நகரின் மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிக்கும் மக்களான குறிப்பாக வன்னிய சமூகத்தினர் விவசாயம் மற்றும் அது தொடர்பான வேலைகளிலும், செங்குந்த மரபினரில் கணிசமானோர் கைத்தறி மற்றும் விசைத்தறி வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். கணிசமான எண்ணிக்கையில் அரசுத்துறை ஊழியர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் உள்ளனர்.

   கடந்த பத்தாண்டு காலத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி காரணமாக இங்கும் சென்னை மற்றும் திருபெரும்புதூர் போன்ற இடங்களில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் தங்களின் கல்வித்தகுதிக்கேற்ற பலதரப்பட்ட வேலைகளுக்கு நகரின் மக்கள் ஏராளமானோர் செல்கின்றனர். இவ்வாறாக வேலைக்குச் சென்று வரும் பிரிவினரால் நகரின் பொருளாதார நிலைமை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெசவு மற்றும் விவசாயத் தொழில்களில் பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு தரும் கவர்ச்சி இளைஞர்களை பெரிதும் ஆட்கொள்வதால், மேற்படி தொழில்களை நகரிலுள்ள வயதான பெரியவர்களே கவனித்துவருகின்றனர்.

   மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் முடங்காதிருக்க, நகரில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியாவும், தொடக்க வேளாண்மை வங்கியும் செயல்படுகின்றன.

கூட்டுறவு வங்கி


   1956 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வங்கி தொடக்க காலத்திலிருந்து தக்கோலம் பேரூர் மக்களுக்கு என்று மட்டுமல்லாது சுற்றுப்புற கிராமமக்கள் அனைவருக்கும் சிறப்பான சேவை அளித்துவருகின்றது. விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்ககு உதவிக்கரம் நீட்டும் இவ்வங்கி, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வசதி செய்வதை முதன்மையாகக் கருதுகிறது.

   இவ்வங்கியின் தொலைபேசி எண். 04177 - 246280

Photos

Previous   

   Next

 



யூனியன் பாங்க் ஆப் இந்தியா


   அக்டோபர் 1973 இல் தொடங்கப்பட்ட இவ்வங்கி ஒன்றே நமது நகரின் பொதுத் துறை வங்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஆகும் இவ்வங்கியும் தக்கோலம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் வியாபார நோக்கத்திற்காகவும் விவசாயப் பணிக்கெனவும் சேவை செய்து வருகிறது. ஏறத்தாழ 11,000 வாடிக்கையாளர்கள் கொண்ட இவ்வங்கியின் தொலைபேசி எண் 04177- 246224

Photos

Previous.   

   Next.

 


* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.