|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

வரலாறூ


தக்கோலப் போர்


     பிற்காலச் சோழப் பேரரசின் மன்னன் முதலாம் பராந்தகனின் மகன் பட்டத்து இளவரசர் இராசாதித்யன்.மூன்றாம் கிருஷ்ணன் என அழைக்கப்படும் கன்னரதேவன் இராட்டிரகூட அரசின் இளவரசன்.அந்நாளில் மேற்கண்ட இரு அரச வம்சத்தினருக்கிடையே நிலவிய அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக அவர்களிடையே போர் மூண்டது.சோழர்களுக்கு ஆதரவாக சேரர்கள் இப்போரில் ஈடுபட்டனர்.அதே போல் கங்க தேசத்து மன்னன் இராட்டிரகூடர்களுக்காகக் களமிறங்கினான்.


     இருபெரும் படைகளும் இராசாதித்யன் மற்றும் கன்னரதேவன் தலைமையில் வியூகம் வகுத்தன.கி.பி.949 இல் தக்கோலத்தில் நடைபெற்ற இக்கடும்போரில் சோழ இளவரசன் இராசாதித்யன்,கன்னரதேவனின் மைத்துனனும் கங்க தேசமன்னனுமான இரண்டாம் பூதுகன் எய்த விஷம் தோய்ந்த அம்பினால் தாக்கப்பட்டு உயிர் இழந்ததைத் தொடர்ந்து சோழப்படைகள் போரில் தோற்றுப் பின்வாங்கின.


     தக்கோலப் போரில் சோழர்கள் தோற்றாலும்,இத்தோல்வி அவர்களுக்கு மீண்டும் தங்கள் சாம்ராஜ்யத்தை பெரிய அளவில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும்,ஒரு பெரிய கப்பற் படையை உருவாக்கி அதன்மூலம் சோழப் பேரரசை இந்திய தீபகற்ப எல்லைக்கு அப்பால் விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் அளித்தது.இதன் விளைவாகவே, முதலாம் இராஜராஜன் மற்றும் அவரது மகன் முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் ஆட்சிக்காலத்தில் சோழ சாம்ராஜ்யம் மிகப்பெரிய அளவில் விரிவடைந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரும் சாம்ராஜ்யமாக விளங்கியது.


அற்றை நாள் போர்க்களம் – இன்று


    தக்கோலம் நகருக்கு வடக்குப்பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய புதர்கள் மற்றும் செடிகள் மண்டிக்கிடந்த பரந்துவிரிந்த நிலப்பகுதியில் இப்போர் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.இருபதாண்டுகளுக்கு முன்னர், இந்நிலப்பகுதி தமிழக அரசால் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டு அங்கு தற்போது மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் பிராந்திய பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


    பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் போர்க்களமாக விளங்கிய இடத்தில்,இன்று நமது நாட்டின் பாதுகாப்பு பணிக்கான வீரர்கள் உருவாக்கப்படுகின்றார்கள்.இது தற்செயல் நிகழ்வா அல்லது மிகப்பெரிய போர் நடைபெற்ற அம்மண்ணுக்கு காலம் அளித்துள்ள மரியாதையா என்பது சிந்திக்கவேண்டிய ஒன்று.


    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று அறிஞர் தாலமி தனது நூலில்“தகோலா” என்று குறிப்பிட்டுள்ளது,நமது தக்கோலமே என்று ஒரு கருத்து நிலவுகிறது. முதலாம் இராசேந்திரன் கால கல்வெட்டு ஒன்றில் “கலைத் தக்கோர் புகழ்தலைத் தக்கோலம்”என்றொரு குறிப்பும் காணப்படுகிறது. இருப்பினும் தாலமி குறிப்பிடும் தகோலா என்பது வரலாற்று காலத்தில் கடாரம் என்று– தலைத் தக்கோலமே அன்றி இந்த தக்கோலம் இல்லை என்ற கருத்தும் வரலாற்று அறிஞர்களிடையே நிலவுகிறது.


    கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட “மிலிதா பன்கா” என்ற பெளத்த சமய நூலிலும் தக்கோலம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.இக்குறிப்பும் மேற்குறிப்பிட்ட தக்கோலம் அல்லது தலைத் தக்கோலம் இவற்றுள் எதைப் பற்றி என்பது தெளிவாகப் புலனாகவில்லை.


ஆதாரம்

                         (1) தென்னிந்திய போர்க்களங்கள் / கே.என். அப்பாதுரை.
                         (2) தென்னிந்திய வரலாறு/ கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி.
                         (3) தென்னிந்திய வரலாறு/ எ. சுவாமிநாதன்.
* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.