|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

கல்வி நிலையங்கள்


   நகரின் மக்கள்தொகையில் 70 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்கள் என்று முன்பே பார்த்தோம். நகரில் ஐந்து ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றுள் ஒன்று ஆதிதிராவிட வகுப்பினருக்காக பிரத்யோகமாக செயல்படுகிறது. அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் இயங்கும் நகருக்குக் கூடுதலாக CISF பணியாளர் குழந்தைகளுக்கு என ‘கேந்திரிய வித்யாலாய’ பள்ளி ஒன்றும் செயல்படுகிறது. ஆனாலும், நகரைச் சார்ந்த குழந்தைகளும் அவற்றில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளும் நகரில் இயங்கிவருகின்றன.

அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி


   ஒன்று முதல் எட்டு வகுப்புகளைக் கொண்ட ஜில்லா போர்டு பாடசாலையாக 12.09.1954 அன்று தொடங்கப்பட்ட இப்பள்ளி 30.08.1960 இல் உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தமிழக அரசு 2 கல்வி முறையை அறிமுகப்படுத்திய போது 01.07.1978 இல் இப்பள்ளி மேனிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஓர் உயர்நிலைப்பள்ளி என்ற அளவில் 2010 இல் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள, இப்பள்ளியின் பொன்விழா, பள்ளியின் பழைய மாணவர் பேரவையின் சார்பாகக் கொண்டாடப்படவுள்ளது.

Photos


Previous.   

   Next.

 


அரசினர் பெண்கள் மேனிலைப்பள்ளி


   நகரிலுள்ள பெண் பிள்ளைகள் மட்டுமல்லாது சுற்றுப்புற கிராமத்துப் பெண் பிள்ளைகளும் சிறப்பான கல்வி வசதி பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அக்டோபர் 1995 இல் இப்பள்ளி துவக்கப்பட்டது. ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் திரு. கே. தேவராசன் அவர்களது முயற்சியால் தொடங்கப்பட்டது. அவரே அப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கான இடம், செங்குந்த மரபினரால் நிர்வகிக்கப்படும் தட்சீணாமூர்த்தி சுவாமி மடாலயத்தினரால் கொடையளிக்கப்பட்டது.

Photos


Previous   

   Next

 

* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.