|   Golden Jubilee Celebrations for the GHSS Boys on 11th February 2012. All the old student's are Invited.   |  

அருகமைந்த சுற்றுலாத் தலங்கள்



   தக்கோலம் நகரைச் சுற்றிலும் முக்கியமான திருத்தலங்கள் பல உள்ளன. நகரின் வடக்கே சுமார் 10. கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற ‘திருவாலாங்காடு’ என்ற திருத்தலம் அமைந்து உள்ளது. அருள்மிகு வண்டார்குழலி உனுறை வடாரண்ய ஈஸ்வரர் அருள்பாலிக்கும் திருத்தலம் இது. ஆடல்வல்லான் அருள்மிகு நடராசபெருமான் நடனமாடிய ‘இரத்தினசபை’ இது சிதம்பரத்தின் பொற்சபை, குற்றாலத்தின் சித்திரசபை, நெல்லையில் தாமிரசபை, மற்றும் மதுரையின் வெள்ளி சபை, ஆகிய திருத்தலங்களைப் போன்ற சிறப்பினை பெற்றுள்ள இத்தலத்திற்கு சைவசமய நாயன்மார்களுள் ஒருவரான காரைக்காலம்மையார் வந்து வழிபட்டிருக்கிறார்.

   நகரின் தென்மேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் திருமாற்பேறு (திருமால்பூர்) என்ற ஊர் அமைந்துள்ளது. அங்கும் புகழ்பெற்ற அருள்மிகு மணிகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது.

   கிழக்கே சென்னை செல்லும் வழித்தடத்தில் 10 கி.மீ. தொலைவில் நரசிங்கபுரம் என்றொரு கிராமம் அமைந்துள்ளது. அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் இங்கு அமைந்துள்ளது. இது மிகவும் பழமைச்சிறப்பு கொண்டது. அங்கிருந்து 5 கி.மீ. தூரத்தில் கூவம் என்ற சிற்றூரில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருபுராந்தக ஈஸ்வரர் ஆலயம் தரிசிக்க கிட்டுகிறது.

   சென்னை நகரைச் சுற்றி ஓடும் கூவம் நதி இங்குதான் உற்பத்தி ஆகிறது.

* Golden Jubilee celebration for the Govt Hr Sec School for Boys is likely to be celebrated in December 2011

* Actual work for the new Temple Car for the Jalanatheeswarar temple has just begun on the "Amavasya" day on 7th October 2010

* Independence Day Celebrations in Thakkolam

* CISF RTC (A) Thakkolam Passing Out Function

* Chief Secretary Thiru Sripathi visited Jalanatheeswarar temple.

*A function was held to plant 1000 trees on behalf of Thakkolam Town Panchayat.

*காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?.